“இனி கெத்தாக பேச முடியாது” – வேறு வழியின்றி அடிபணிந்த அஜித்!

தமிழ் சினிமாவில் உள்ள உச்சநட்சத்திரங்களில் ஒருவர் அஜித். தனது செயல்பாட்டின் மூலம் தனித்து தெரியக்கூடிய இவரை, பொதுவெளிகள், திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் உள்ளிட்ட எந்தவொரு இடங்களிலும் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு தனிமை விரும்பியாக இருக்கும் அஜித், தற்போது டோட்டலாக மாறிவிட்டார்.

அஜித் பொதுவெளியில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை, சமீபகாலமாக அதிக அளவில் வைரலாகி வருகின்றன. இவ்வாறு பல்வேறு விஷயங்களை அஜித் மாற்றி வருகிறார். இந்நிலையில், நீண்ட காலமாக பின்பற்றி வந்த மற்றொரு பழக்கத்தையும் அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.

அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் அஜித் நடிக்க மாட்டார் என்று அவரது ரசிகர்கள் பெறுமையுடன் கூறி வந்தனர். ஆனால், தற்போது லைகா புரொடக்ஷன் தயாரிக்க உள்ள 3 படங்களில் அவர் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சக நடிகர்களுக்கு டஃப் கொடுப்பதற்காக, தனது பழக்கத்தில் இருந்து அஜித் மாறிவிட்டதாக, சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.