ரசிகரை அன்பால் உருக வைத்த அஜித்!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது திரைப்படங்களுக்கு மட்டுமின்றி, நல்ல குனத்திற்கும் பலபேர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். உடன் பணியாற்றும் சிறிய தொழிலாளர்களுக்கும், அஜித் நன்றாக மரியாதை தருவார் என்று சினிமா தரப்பினர் கூறுவதுண்டு.

இவ்வாறு இருக்க, அஜித்தின் ரசிகர் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், துணிவு படத்தின் ராப் சாங்கை படமாக்கும்போது, நாங்கள் 4 பேர் ஓரமாக நின்றுக் கொண்டு இருந்தோம்.

எங்களை பார்த்து, ”ஏன் நிக்குறீங்க.. வேலை பார்த்து Tired-ஆ இருப்பீங்க.. உக்காருங்க” என்று அஜித் கூறினார். அதுக்கு பரவால சார்-னு நாங்க சொன்னோம்.. “ சார்-னு சொல்லாத அண்ணா-னு சொல்லு என்று அஜித் கூறினார் என அந்த பதிவில் நெகிழ்ச்சியுடன் ரசிகர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.