Connect with us

Raj News Tamil

அஜித்தின் விடாமுயற்சி படத்தை கலாய்த்த அஜித் ரசிகர்கள்! வைரல் போஸ்டர்!

சினிமா

அஜித்தின் விடாமுயற்சி படத்தை கலாய்த்த அஜித் ரசிகர்கள்! வைரல் போஸ்டர்!

ஒரு படத்திற்கும், அடுத்த படத்திற்கும் இடைவெளி விட்டு, திரைப்படங்களில் நடிப்பதை நடிகர் அஜித் வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

தனது சொந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கும், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காகவும் இவ்வாறு கால இடைவெளியில் படங்களில் அஜித் நடித்து வருகிறார்.

இவ்வாறு செய்வது, சில சமயங்களில் ஓவர் டோஸாக மாறி, இரண்டு வருடங்களில் ஒரு படங்கள் நடித்த சம்பவங்களும் உள்ளது. இது சில சமயங்களில் அஜித் ரசிகர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியும் உள்ளது.

இந்நிலையில், அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம், தலைப்பு அறிவிக்கப்பட்டதோடு, எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்த ரசிகர்கள், தற்போது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த போஸ்டரில், விடாமுயற்சி டைட்டில் அறிவிக்கப்பட்டு 300 நாட்கள் முடிவடைந்துள்ளது. ஆனால், இதுவரை படத்தின் அப்டேட் வெளியாகவில்லை..

படத்தின் அப்டேட்டை கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அஜித்தின் படத்தை , அஜித்தின் ரசிகர்களே கலாய்த்துள்ள இந்த போஸ்டர், இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top