தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் தற்போது தனது 62 படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக, கூறப்படுகிறது.
படத்தின் பின்னணி பணிகள் நடந்து வருவதால், அஜித் தற்போது தனது குடும்ப உறுப்பினர்களிடையே நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் தந்தை மணி என்று அழைக்கப்படும் சுப்ரமணியன், உடல்நலக்குறைவால் காலமானார்.
84 வயதாகும் இவர், கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி, இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த திரை உலகினர், தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.