மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில், லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், கதாநாயகியாக த்ரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடிக்க உள்ளனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, அஜர்பைஜான் நாட்டிலிருந்து கடந்த 24ம் தேதி அஜித் சென்னை திரும்பினார். இவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வீடியோ காட்சி சமூக வலைதளதளத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் நடிகர் அஜித்குமார் அஜர்பைஜான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலேயே நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.