Connect with us

Raj News Tamil

சம்பளமே வாங்காமல் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஜித்..!

சினிமா

சம்பளமே வாங்காமல் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஜித்..!

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படத்திற்கு அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்தின் கெரியரில் அவர் நடித்த அமர்க்களம் திரைப்படம் மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அஜித்தை வைத்து ஏற்கனவே காதல் மன்னன் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த சரண் தான் அமர்க்களம் படத்தை இயக்கியிருந்தார்.

அமர்க்களம் படத்தில் நடித்தபோதுதான் ஷாலினிக்கும் அஜித்துக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் திருமணமும் நடந்தது.

அமர்க்களம் படத்தில் நடித்த அஜித் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. முந்தைய படத்தில் ஏற்பட்ட இழப்புக்காக அவர் சம்பளம் வாங்காமலேயே அமர்க்களம் படத்திற்கு நடித்துக் கொடுத்துள்ளார். இந்த தகவலை இயக்குநர் சரண் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top