Connect with us

Raj News Tamil

தளபதி 68 குறித்து அஜித் என்ன சொன்னார் தெரியுமா? – சுவாரசிய தகவல்!

சினிமா

தளபதி 68 குறித்து அஜித் என்ன சொன்னார் தெரியுமா? – சுவாரசிய தகவல்!

தளபதி விஜய் நடிக்கும் 68 படத்தை, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள இந்த படத்தை, ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்தார். அப்போது, தளபதி 68 படம் ஒப்பந்தம் ஆனதற்கு, அஜித் வாழ்த்து கூறினாரா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், முதல் வாழ்த்து அஜித்திடம் இருந்துதான் வந்தது என்று தெரிவித்தார். மேலும், தளபதி 68 படத்தின் ஷீட்டிங், அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

More in சினிமா

To Top