இது தப்பு AK.. புதிய சர்ச்சையில் அஜித்குமார்!

வரும் பொங்கல் பண்டிகை அன்று துணிவு படம் வெளியாக இருப்பதால், அதன் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் அஜித்குமார் கலந்துக் கொள்வார் என்று சமீபத்தில் தகவல் பரவி வந்தது.

ஆனால், அந்த தகவல் அனைத்தும் வதந்தி என்று அஜித் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் புரோமோஷனுக்கு அஜித் வழக்கம் போல் ஒத்துழைக்காதது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி நடிகர்களை போன்று தமிழ் நடிகர்கள் படத்திற்கு புரோமோஷன் செய்வதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இதில், அஜித் மிகவும் பிடிவாதமாக, சிறிதளவு கூட, புரோமோஷன் செய்வதில்லை. இதுதான் சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாம். இருப்பினும், அஜித்திற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள், குரல் கொடுத்து வருகின்றனர்.