அஜித்துடன், வீரம், வலிமை ஆகிய படங்களில் நடித்திருப்பவர் சுமித்ரா. இவர், Youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.
இந்த பேட்டியில், படப்பிடிப்பு தளத்தில் அஜித் எவ்வாறு நடந்துக் கொள்வார் என்ற தகவலை அவர் கூறியுள்ளார்.
அதாவது, “ஒரு மாதிரியே அஜித் நடந்துக் கொள்ள மாட்டார். நம் குடும்பத்தில் ஒருவரை போலவே பழகுவார்” என்று தெரிவித்தார்.
மேலும், “தனக்கு 3 குழந்தைகள் உள்ளது என்று அஜித் என்னிடம் கூறுவார். அவருடைய மனைவி தான், அவருக்கு முதல் குழந்தை என்றும் அவர் என்னிடம் கூறுவார்” என அந்த பேட்டியில், சுமித்ரா தெரிவித்துள்ளார்.