அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், குட் பேட் அக்லி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம், வரும் மே 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் சில காட்சிகளை, நடிகர் அஜித் பார்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த காட்சிகள் அஜித்தை திருப்திபடுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், இன்னொரு திரைப்படத்தில் மீண்டும் இணையலாம் என்று, ஆதிக் ரவிச்சந்திரனிடம், அஜித் கூறியிருப்பதாக, இணையத்தில் தகவல் பரவி வருகிறது. குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தை கவர்ந்திருப்பதால், ரசிகர்களையும் அது கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.