நம்ப முடியாத அளவுக்கு ஒல்லியான அஜித்? வைரல் புகைப்படம்!

துணிவு படத்திற்கு பிறகு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில், அஜித் நடித்து வருகிறார். இதில், விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கும், குட் பேட் அக்லி திரைப்படம் மே மாதமும் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று ரிலீஸ் ஆகியுள்ளது. அதில், நம்பவே முடியாத அளவுக்கு, தனது உடல் எடையை அவர் குறைத்துள்ளார்.

விடாமுயற்சி படத்துக்காக தான், அஜித் உடல் எடையை குறைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News