Connect with us

Raj News Tamil

“எனக்கு அஜித் தான் ஆசிரியர்” – வாழ்த்திய பிரபல நடிகர்!

சினிமா

“எனக்கு அஜித் தான் ஆசிரியர்” – வாழ்த்திய பிரபல நடிகர்!

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால், பலரும் தங்களது ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகர் ஒருவர், அஜித் தான் தன்னுடைய ஆசிரியர் என்று கூறி, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதாவது, வீரம், சார்பட்டா பரம்பரை, துணிவு ஆகிய படங்களில் நடித்துள்ள ஜான் கொக்கைன், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நம் வாழ்வை நல்வழிப்படுத்துபவர்கள் தான் ஆசிரியர்கள். என்னுடைய ஆசிரியர் அஜித் தான். எனக்கு மட்டுமின்றி, கோடிக்கணக்கானவர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருந்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top