ஷாலினியின் தந்தை ஏ .எஸ் பாபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மருமகன் அஜித்தை குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அதில், அஜித் தன் குடும்பத்தினரோடு வீட்டிற்கு வந்து ஷாலினியை பெண் கேட்டு திருமணம் செய்து கொண்டதாகவும் அன்று எப்படி இருந்தாரோ அதேபோல் தான் இன்றளவும் இருக்கிறார் என்றும் கூறினார். மேலும் வீட்டில் பணிபுரியும் வேலையாட்களையும் அவர் தன் குடும்பத்தில் இருப்பவரைப் போலவே அன்புடனும், மரியாதையுடனும் நடத்துவார்.
அஜித்தின் இந்த குணம் அவர் மீதுள்ள மரியாதையை மேலும் அதிகரிக்க செய்கிறது என்று ஷாலினியின் தந்தை கூறியுள்ளார். இதனாலயே, எங்க தலயை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.