அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸ் ஆன நிலையில், அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும், Breakdown என்ற ஆங்கில படத்தின் சாயல், விடாமுயற்சி டீசரில் இருந்தது. இந்நிலையில், Breakdown படக்குழுவினர் விடாமுயற்சி படக்குழுவுக்கு, சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
முறையான அனுமதி பெறாமல், படத்தின் கதையை பயன்படுத்தியிருப்பதால், இந்த நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், 127 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிட்டிருப்பதாகவும், தகவல் பரவி வருகிறது.