தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது தந்தை சமீபத்தில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த அஜித்தின் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அவருக்கு ஆறுதலை கூறி வந்தனர்.
இதேபோல், அதிமுக கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அஜித்திற்கு நேரடியாக செல்போனில் அழைப்பு விடுத்து, தனது ஆறுதலை கூறினார்.
இந்நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு அஜித் செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது, அதிமுக கட்சியின் புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, அஜித் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பொதுவாக அரசியல் தொடர்பான விஷயங்களில் தலையிடாத அஜித், எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் வாழ்த்துக்கள் கூறியிருப்பது, அஜித் அதிமுக ஆதரவாளரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.