Connect with us

Raj News Tamil

உச்சகட்ட டெடிகேஷன்.. படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அஜித்.. பரபரப்பு வீடியோ வைரல்!

சினிமா

உச்சகட்ட டெடிகேஷன்.. படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அஜித்.. பரபரப்பு வீடியோ வைரல்!

பொதுவாக உச்ச நடிகர்கள் ஆக்ஷன் காட்சிகளை, டூப் போட்டு நடிப்பார்கள். ஆனால், ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிக்கும் ஒருசில நடிகர்களில் ஒருவர் அஜித் குமார்.

குறிப்பாக, ஆரம்பம், வீரம், விவேகம், வலிமை ஆகிய படங்களில் இடம்பெற்ற மிகவும் கடினமான ஸ்டன்ட் காட்சிகளை, டூப் இல்லாமல் செய்து, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

இவ்வாறு இருக்க, தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்திலும், தனது டெடிகேஷன் லெவலை அஜித், மீண்டும் நிரூபித்துள்ளார். அதாவது, விடாமுயற்சி படத்தில் காரில் வேகமாக செல்வது போல் காட்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

அந்த காட்சியில், டூப் இல்லாமல் நடித்த அஜித், விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். நவம்பர் மாதம் விபத்தில் அவர் சிக்கியிருந்த நிலையில், தற்போது வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ, ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.

More in சினிமா

To Top