Connect with us

Raj News Tamil

மங்காத்தா 2 உறுதியா? – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

சினிமா

மங்காத்தா 2 உறுதியா? – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அஜித்தின் திரை வாழ்க்கையில், 50-வது படமாக அமைந்த மங்காத்தா, மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த திரைப்படம் வெளியாகி, பல வருடங்கள் ஆகியும், இன்னும் அதுபோன்ற தரமான கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவே இல்லை.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித்தை தற்போது சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம், தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மங்காத்தா 2-வின் பேச்சுவார்த்தைக்காக, இருவரும் சந்தித்து இருப்பார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

More in சினிமா

To Top