சினிமா
அஜித் புகைப்படம் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்! அட என்னப்பா இவரு?
துணிவு படத்திற்கு பிறகு, ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அஜித் இருந்து வருகிறார். இதனால், விக்னேஷ் சிவனை கழட்டிவிட்ட அவர், மகிழ் திருமேனியுடன் கூட்டணி வைத்தார்.
விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், மாஸ், ஆக்ஷன், கமர்ஷியல் என்டர்டெயினராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அஜித் தனது ரசிகர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அந்த ரசிகர், “அஜித் சார் உடன்.. நேர்மறையான எண்ணம் கொண்ட மனிதர்” என்று கூறியிருந்தார்.
அஜித்தின் அந்த புகைப்படத்தை பார்த்த மற்ற ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, துணிவு படத்திற்காக எவ்வளவு எடையை அவர் குறைத்தாரோ, அதைவிட இரண்டு மடங்கு எடையை தற்போது ஏற்றியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு எடை இருந்தால், ஆக்ஷன் காட்சிகளில் எப்படி நடிக்க முடியும் என்றும், படப்பிடிப்பு தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில், இன்னும் உடல் எடையை குறைக்காமல் உள்ளரே என்றும் கூறி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login