துணிவு படத்தில் அஜித்தின் இன்னொரு லுக்!

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் துணிவு. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், ஜனவரி 11-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அஜித்தின் இன்னொரு லுக் தற்போது வெளியாகியுள்ளது. அதில், தாடி முழுவதையும் அஜித் சவரம் செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி, ரசிகர்கள் பலரையும், வெகுவாக கவர்ந்துள்ளது.