எச்.வினோத்துக்கு Pressure கொடுக்கும் அஜித்!

துணிவு திரைப்படத்தை, வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியிடும் முயற்சியில், படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எடிட்டிங், டப்பிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட பின்னணி பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால், இந்த படத்தில், CG பணிகள் அதிகமாக இருப்பதால், பொங்கலுக்குள் படத்தை முடிக்க முடியாத சூழல் இருந்து வருகிறதாம்.

ஆனால், படத்தை சீக்கிரமாக முடித்துவிட்டு, கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று அஜித் Strict-ஆக கூறியுள்ளாராம். ரசிகர்களுக்காக தான் அஜித் இவ்வாறு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.