துணிவு திரைப்படத்தில் அஜித் பாடியிருக்கிறாரா?

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு. பொங்கல் பண்டிகை அன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் மீது, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை, அஜித் பாடியுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவி வந்தது. ஆனால், அது வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த பாடலில், அஜித் பேசும் வசனம் இடம்பெற உள்ளதாம்.

இந்த வசனங்கள் அனைத்தும், செம மாஸாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை அறிந்த அஜித் ரசிகர்கள், செம உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.