விடாமுயற்சியின் படப்பிடிப்பு அக்டோபர் 4ஆம் தேதி அஜர்பைஜானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்நாட்டில் நிகழும் சமூக பிரச்சனை காரணமாக, இப்படப்பிடிப்பு இன்னும்தொடங்கவில்லையாம்.
இந்நிலையில் அஜித்தின் மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்” என்கின்ற பைக் டூர் நிறுவனத்தை அஜித் துவங்கி உள்ளார் என்றும் வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி இந்நிறுவனத்தின் முதல் டூர் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் ஓமன் நாட்டிற்கும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசென்கள், அப்போ பைக் டூர்ன்னு போனதெல்லாம் இந்நிறுவனத்தின் ப்ரோமோஷனுக்காக தானா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
