Connect with us

Raj News Tamil

10 வருடங்களுக்கு பிறகு கூட்டணி சேரும் அஜித்! யார் அது?

சினிமா

10 வருடங்களுக்கு பிறகு கூட்டணி சேரும் அஜித்! யார் அது?

துணிவு படத்திற்கு பிறகு, அஜித் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தை, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், நடிகர் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதுவரை அந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஆதிக்-அஜித் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், அஜித்துடன் DSP 10 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி அமைப்பார். இருவரும், 2014-ஆம் ஆண்டு வெளியான வீரம் படத்தில், ஒன்றாக பணியாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top