சினிமாவில் பல ஆண்டுகள் தடம் பதிக்கும் நடிகர்களும், பிரபலங்களும், அதனை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், அஜித்தின் 32 வருட சினிமா பயணம், நேற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
ஆனால், அந்த கொண்டாட்டங்கள் தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, அஜித்தின் முதல் திரைப்படமான அமராவதி, 1993-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
இதனை கணக்கில் வைத்துக் கொண்டால், அஜித் சினிமாவில் நுழைந்து 31 வருடங்கள் மட்டும் ஆகியுள்ளது. ஆனால், 32 வருட சினிமா பயணம் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என கேள்வி எழுந்துள்ளது.
மேலும், அப்படியே கொண்டாடுவதாக இருந்தாலும், ஜூன் 4-ஆம் தேதி தானே கொண்டாடியிருக்க வேண்டும். எதற்காக நேற்று கொண்டாடினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.