நடிகர் அஜித்குமார், சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனையில், வருடாந்திர உடல் பரிசோதனைக்கு சென்றிருந்தார். அப்போது, அவரது காதுக்கு கீழே சிறிய அளவிலான கட்டி இருப்பதாக, கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, உடனே அறுவை சிகிச்சை செய்து, அந்த கட்டியை மருத்துவர்கள் நீக்கியிருந்தனர். இவ்வாறு ஆபரேஷன் செய்திருந்த நடிகர் அஜித், வீட்டில் ஓய்வு எடுப்பார் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால், ஆபரேஷன் முடிந்த அடுத்த நாளே, தனது மகனுக்காக, அவரது பள்ளிக் கூடத்திற்கு, அஜித் சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.