விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில், அஜித் தற்போது நடித்து வருகிறார்.
இதில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒரே ஒரு கட்ட படப்பிடிப்பு மட்டும் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதனால், குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் அஜித் நடித்துவிட்டார்.
இதையடுத்து, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்கு காத்திருந்தார். ஆனால், அந்த படப்பிடிப்பு தொடங்குவதற்கான அறிகுறியே தெரியாமல் இருப்பதால், மீண்டும் குட் பேட் அக்லியின் 2-வது கட்ட படப்பிடிப்புக்கு செல்ல அஜித் முடிவெடுத்துவிட்டாராம்.
போற போக்கை பார்க்கும்போது, விடாமுயற்சிக்கு முன், குட் பேட் அக்லி ரிலீஸ் ஆகிவிடும் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.