சோஷியல் மீடியாவில் களமிறங்கும் அஜித்? செம சர்ப்ரைஸ்!

தங்களது ரசிகர்களுடன் உரையாடுவதற்கும், அவர்களிடம் தங்களுடைய படம் தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்கும், நடிகர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.

இதில், நடிகர் அஜித் மட்டும் இதுவரை சமூக வலைதளங்களில் கணக்குகள் எதையும் தொடங்கவில்லை. ஆனால், தற்போது அஜித்தும் சமூக வலைதள கணக்குகளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னுடைய புகைப்படங்களை அஜித்தின் நண்பர்கள் வெளியிட்டு வந்த நிலையில், இனி தனது புகைப்படங்களை நேரடியாக தானே வெளியிடுவதற்காக, அஜித் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ஆனால், அஜித்தின் ரசிகர்கள், இந்த தகவலில் உண்மையில்லை என்றே கூறி வருகின்றனர். எது உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..