Connect with us

Raj News Tamil

விஜய் பட இயக்குநருடன் கூட்டணி சேரும் அஜித்? யார் தெரியுமா?

சினிமா

விஜய் பட இயக்குநருடன் கூட்டணி சேரும் அஜித்? யார் தெரியுமா?

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில், அஜித் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படங்களை முடித்த பிறகு, ஒரு வருடம் ஓய்வு எடுக்கும் அஜித், அடுத்ததாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் பட இயக்குநர் அஜித்திடம் கதை கூறியுள்ளதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்துவிட்டதாகவும், தகவல் ஒன்று பரவி வருகிறது.

அதாவது, விஜயின் வேலாயுதம், ஜெயம் ரவியின் தனி ஒருவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மோகன் ராஜா. இவர் தற்போது அஜித்திடம் புதிய கதை ஒன்றை கூறியுள்ளாராம்.

இந்த கதையை கேட்டு வியந்த அஜித், பாசிட்டிவ்வான கமென்ட்ஸ்களை கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், சிறுத்தை சிவாவின் படத்திற்கு பிறகு, மோகன் ராஜாவுடன் அஜித் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

More in சினிமா

To Top