ஏ.வி.எம் அருங்காட்சியகத்தில் அஜித்தின் பைக் !

தென்னிந்திய சினிமாவின் புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் முக்கிய நிறுவனமாக விளங்கி வறுவது ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ்.சென்னை, வடபழனியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் ஸ்டுடியோவில் ‘ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பழைய மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறிய திரைப்பட தயாரிப்பு தொழில்நுட்ப கருவிகளையும், மிகப் பழமையான பாரம்பரியமிக்க, கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காட்சி படுத்தபட்டு இருக்கிறது.

இந்நிலையில், தற்போது இந்த மியூசியத்தில் நடிகர் அஜித்தின் பைக் இடம்பெற்றுள்ளது. அதாவது, ‘திருப்பதி’ படத்தில் அஜித் பயன்படுத்திய (பஜாஜ் பல்சர் 180சிசி 2004) பைக்கை மியூசியத்தில் இணைத்துள்ளதாக ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.இதனை அஜித் ரசிகா்கள் ஷோ் செய்து வைரலாக்கி வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News