Connect with us

Raj News Tamil

அஜித்தின் AK 62 படத்தின் டைட்டில் இதுவா? இணையத்தில் பரவும் தகவல்..!

சினிமா

அஜித்தின் AK 62 படத்தின் டைட்டில் இதுவா? இணையத்தில் பரவும் தகவல்..!

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.

இதையடுத்து ஏகே 62 படத்தை தடையற தாக்க, மீகாமன் மற்றும் தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் AK 62 படத்தின் தலைப்பு குறித்து தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்த படத்திற்கு ‘டெவில்’ என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்த தகவலை நெட்டிசன்கள் கிளப்பிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே ஏகே 62 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top