Connect with us

Raj News Tamil

AK 62 படப்பிடிப்பு எப்போது? புதிய அப்டேட் என்ன?

சினிமா

AK 62 படப்பிடிப்பு எப்போது? புதிய அப்டேட் என்ன?

அஜித்தின் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், உருவான துணிவு திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, மகிழ் திருமேணி இயக்கும் புதிய படத்தில், அஜித் நடிக்க உள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கிடக்கின்றனர்.

இந்நிலையில், வெளிநாட்டில் சுற்றுலாவில் ஈடுபட்டு வந்த அஜித், தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களும், இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அஜித்தின் வருகைக்காக காத்திருந்த தயாரிப்பாளர் தரப்பு, அவர் வந்துவிட்டதால், AK 62 படத்திற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் இன்னும் ஒரிரு நாட்களில், அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் கசிந்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top