துணிவு படத்தை தொடர்ந்து, அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் ஏகே 62… விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின், ஹூட்டிங் வேலைகள், வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுக்கிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா அல்லது நயன்தாரா நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், தற்போது முன்னால் உலகழகி ஐஸ்வர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட இத்தகவல் உறுதியாகிவிட்டதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
கடந்த 2000-மாவது ஆண்டு அஜித் நடித்த ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படத்தில் ஐஸ்வர்யா நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிவராத ”ஏகே 62” படத்தின், டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்நிறுவனம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட ஆகிய 4-மொழிகளின் உரிமத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.