ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கிய பிரபல நடிகை!

சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள், சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுஷாந்த் சிங், சின்னத்திரை நடிகை சித்ரா, வாய்தா பட நடிகை பவுலின் என்று பல்வேறு திரைப்பிரபலங்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பாலிவுட் நடிகையும், மாடலிங் அழகியுமான அகான்ஷா மோகன் என்பவர், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து, அங்கு பரிசோதனை செய்த காவல்துறையினருக்கு, கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், ‘மன்னிக்கவும், நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி மட்டுமே தேவை.,எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல, யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்’ என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடிகையின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.