இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரும் பாஜக – அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி குற்றச்சாட்டு

டெல்லி கலால் வரி முறைகேட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில், ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர், பாஜகவிற்கு எதிராக தீவிரமாக பேசி வருகிறார்.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இணைந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “பாஜகவை சேர்ந்தவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களாக உள்ளனர். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நமது அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள் மற்றும் இடஒதுக்கீடு முறையை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள்” என்று கூறினார்.

மேலும், பாஜக மீண்டும் வெற்றிப் பெற்றால், உத்தரபிரதேசத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத் நீக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “நாடாளுமன்ற தேர்தலின் முதல் நான்கு கட்டங்களில், பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News