Connect with us

Raj News Tamil

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: உச்சநீதிமன்றம்!

இந்தியா

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: உச்சநீதிமன்றம்!

கோயிலின் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் சுகனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி கடந்த 2018ல் கோயில் நிர்வாக அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அங்கு பணிபுரிந்து வரும் முத்து சுப்ரமணிய குருக்கள் இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தீர்ப்பு வழங்கினார். பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வும் தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தனர்.

தொடர்ந்து மனுதாரர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஸ்வர் மற்றும் பரிதிவாலா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து, கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

More in இந்தியா

To Top