Connect with us

Raj News Tamil

நாளை நடைபெறுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்..!

இந்தியா

நாளை நடைபெறுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்..!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ம் தேதி துவங்கி பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்க உள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றிய பின் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருப்பதால் இந்த பட்ஜெட்டில் மிக முக்கியமான சலுகைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More in இந்தியா

To Top