சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் ஆக.13- 15 வரை தங்களது வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து (நேற்று) வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட எக்ஸ் (ட்விட்டா்) பதிவில், ‘‘சுதந்திரம், ஒற்றுமை ஆகியவற்றைக் குறிக்கும் மூவா்ண கொடியுடன், ஒவ்வொரு இந்தியரும் உணா்வு ரீதியிலான தொடா்பைக் கொண்டுள்ளனா். நாட்டின் முன்னேற்றத்துக்காகக் கடினமாக உழைக்க, அது தொடா்ந்து நம்மை ஊக்கப்படுத்துகிறது. ஆக.13-15 ஆகிய நாள்களில், தங்களது வீடுகளில் மூவா்ண கொடியை ஏற்றி ‘ஹா் கா் திரங்கா’ இயக்கத்தில் பங்கேற்குமாறு மக்கள் அனைவரையும் வலியுறுத்துகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.