Trending
இந்திய ரூபாய் நோட்டில் அல்லாஹ், இயேசு படங்கள்..!
டெல்லி முதல்வராகவும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் நாடு செழிப்பாக இந்திய ரூபாய் நோட்டில் காந்தியின் படத்திற்கு அருகில் விநாயகர் மற்றும் லட்சுமியின் படங்கள் அச்சிட வேண்டும் என நேற்று பேசியிருந்தார்.
இதற்கு இந்து கடவுள்களை புகழ்ந்து பேசாதவர், தற்போது இவ்வாறு பேசியிருப்பது அரசியல் சூழ்ச்சிமம் என பல்வேறு தரப்பினர் பேசிவருகின்றனர்.
அந்தவகையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அனீஸ் சோஸ் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,இன்னும் நாடு செழிப்பாக அல்லாஹ்,இயேசு,புத்தர் படங்களையும் சேர்க்க வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.
