தேசிய விருதை தட்டி சென்ற அல்லு அா்ஜீன்! குஷியில் ரசிகா்கள்!

69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில்,சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுன் பெற்றுக் கொண்டார்.இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.இதில் ‘புஷ்பா’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில்,புஷ்பா ,அல்லுஅா்ஜீன் ரசிகா்கள் இதனை ஷோ் செய்து கொண்டாடி வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News