சிறுவயதில் கமலுக்கு பேரனாக நடித்த அல்லு அர்ஜுன் – வைரலாகும் போட்டோ..

விக்ரம் படம் வெற்றியை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் 1985 -ம் ஆண்டு வெளியான “சிப்பிக்குள் முத்து” என்ற படத்தில் கமல் ஹாசனுக்கு பேரனாக நடித்திருப்பார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.