தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் அல்லு அர்ஜூன். இவர், கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் மூலம், பான் இந்தியன் ஸ்டாராக மாறியுள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும், அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில், இவர் தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை, ட்விட்டரில் ப்ளாக் செய்துள்ளார். இதனால், நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, கடந்த 2010-ஆம் ஆண்டு அன்று, அல்லு அர்ஜூனும், பானு மெஹ்ரா என்ற நடிகையும், வருடு படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு பிறகு, சில படங்களில் நடித்த பானு, அதன்பிறகு வாய்ப்புகள் கிடைக்காததால், சினிமாவில் இருந்து விலகினார். இந்த நடிகை தற்போது, அல்லு அர்ஜூனை ட்விட்டர் தளத்தில் பின்தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரை நடிகர் அல்லு அர்ஜூன் ப்ளாக் செய்துவிட்டார்.
இதுகுறித்து அந்த நடிகை பதிவிட்டு, தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். மேலும், தான் யார் என்று தெரியாமல் தான் அவர் ப்ளாக் செய்திருப்பார் என்றும், அந்த நடிகை தனது பதிவில் கூறியிருந்தார். பின்னர், இந்த பதிவு, அல்லு அர்ஜூன் கவனத்திற்கு சென்றதையடுத்து, அந்த நடிகை மீண்டும் அன் ப்ளாக் செய்யப்பட்டுள்ளார். இது பற்றி பானு கூறும்போது, “அல்லு அர்ஜுனுக்கு பெரிய மனது. என்னை அன்பிளாக் செய்ததற்கு நன்றி. இப்போது சந்தோஷமாக உணர்கிறேன்” என்றார்.