தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவர், புஷ்பா படத்தின் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக மாறியிருக்கிறார்.
இதற்கிடையே, நடிகர் அல்லு அர்ஜூன் அரசியலில் நுழைய இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல், இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து அல்லு அர்ஜூனின் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, அல்லு அர்ஜூன் அரசியலில் நுழைய இருப்பதாக பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.