நடிகர் விஜய் தனது கடைசி படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்காக, 275 கோடி ரூபாயை, இவர் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று கூறப்பட்டது.
இதன்மூலம், தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்து வந்தார். இந்நிலையில், சம்பள விவகாரத்தில், நடிகர் விஜயை, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, புஷ்பா 2-ஆம் பாகத்தில் நடிப்பதற்கு, 300 கோடி ரூபாயை, அல்லு அர்ஜூன் சம்பளமாக வாங்கியுள்ளாராம். இது, பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.