புஷ்பா படத்தின் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் அல்லு அர்ஜூன். இவர், அடுத்ததாக இயக்குநர் அட்லியுடன் கூட்டணி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படம், மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் தொடர்பான புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி, அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக, நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர், பாலிவுட்டின் சென்சேஷன் நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.