தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவர், புஷ்பா படத்தின் மூலமாக, இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக மாறியுள்ளார்.
இதனால், இவரது ஒவ்வொரு படத்தின் அறிவிப்புக்காகவும், ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில், புஷ்பா 2-வுக்கு பிறகு, அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.
அதன்படி, திரி விக்ரம் என்ற இயக்குநரின் படத்தில் அவர் அடுத்ததாக நடிக்க உள்ளாராம். இந்த இயக்குநர், கடைசியாக குண்டூர் காரம் என்ற தோல்வி படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.