தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். வித்தியாசமான கதாபாத்திரங்களில் துணிச்சலுடன் நடிக்கக் கூடிய இவர், ஆடை என்ற படத்தில், நிர்வாணமாக நடித்து, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தார்.
இவ்வாறு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, நடிக்கக் கூடிய அமலா பால், தற்போது ஆடு ஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பிரித்விராஜ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை, பிளசி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும், அமலா பால் லிப்-லாக் தருவது போன்ற காட்சிகள், அந்த டிரைலரில் இடம்பெற்று, அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இந்த காட்சி குறித்து, அவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ஆடு ஜீவிதம் படத்தின் கதையை சொன்னபோது லிப்லாக் காட்சி இருப்பதை சொல்லிவிட்டார்கள். இந்த படத்தின் கதைக்கும் காட்சிக்கும் அது அவசியப் பட்டதால் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டேன்.
கதைக்கு ஏற்ப நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆடையே இல்லாமல் நடித்த எனக்கு லிப்லாக் காட்சியில் நடிப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை” என்று கேசுவலாக பதில் கொடுத்து இருக்கிறார் அமலா பால்.