அமலா பால், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் சிந்து சமவெளி. மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையே காதல் ஏற்படுவது போல் கதை அமைக்கப்பட்டிருந்ததால், இந்த படம் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்தது குறித்து, நடிகை அமலா பால் பேசியுள்ளார். அதாவது, “சிந்து சமவெளி படத்திற்கு பிறகு, பல்வேறு துன்பங்களை நான் சந்தித்தேன்” என்றும், “என்னைவிட என் அப்பா தான் மிகவும் வருத்தம் அடைந்தார்” என்றும், தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக தான், மைனா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட கலந்துக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சிந்து சமவெளி திரைப்படத்தில் நடிக்கும்போது, அமலா பாலுக்கு வெறும் 17 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.