Connect with us

Raj News Tamil

காதலனுடன் லிப் லாக்…இரண்டாவது திருமணத்திற்கு தயாரான அமலா பால்?

சினிமா

காதலனுடன் லிப் லாக்…இரண்டாவது திருமணத்திற்கு தயாரான அமலா பால்?

2010 -ம் ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அமலா பால் ‘மைனா’ படம் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானார்.

இதையடுத்து இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்தபோது அவர் மீது காதல் வயப்பட்ட அமலா பால், கடந்த 2014-ம் ஆண்டு அவரை திருமணமும் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த அமலா பால், இயக்குனர் ஏ.எல் விஜய் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

ஏ.எல்.விஜய் உடனான விவாகரத்துக்கு பின்னர் சிங்கிளாகவே இருந்து வந்த அமலாபால் தற்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளார். அவர் தனது காதல் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள் என்பது சூசகமாக தெரியவந்துள்ளது.

More in சினிமா

To Top