டார்ச்சர் பண்ணாங்க…கொடுமை செஞ்சாங்க – அமர் பிரசாத் ரெட்டி பேட்டி

பாஜக கொடிக்கம்பம் தகராறு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்சியின் மூத்த நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்த அமர் பிரசாத் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது: என்னை பார்க்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மனு போட்டும் கூட அவர்களை சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பல மணிநேரம் அவர்களை வேண்டுமென்றே காக்க வைப்பார்கள். என்னுடைய வழக்கறிஞர்களை கூட என்னை பார்க்க முடியாதபடி செய்தார்கள்.

நான் மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு சிறைக்கு போகவில்லை. என் கட்சிக்காக, என் கொடிக்காக குரல் கொடுத்து சிறைக்கு சென்றிருக்கிறேன். அதில் எனக்கு பெருமைதான். மக்கள் பணத்தை கொள்ளை அடிச்ச ஒருத்தரும் அதே ஜெயிலில்தான் இருக்கிறார். அவருக்கு என்னென்ன வசதி எல்லாம் செய்து தருகிறார்கள் என்பது எனக்கு தெரியும். அதை பற்றி நான் பிறகு கூறுகிறேன்.

நான் 22 நாட்களாக சிறையில் இருந்திருக்கேன். எல்லா கொடுமையும், டார்ச்சரும் அனுபவிச்சிட்டேன். சிறை வாழ்க்கை என்னை வேறு மாதிரியாக மாற்றி இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும். இது நடக்கலைனா என்ட்ட கேளுங்க. இவ்வாறு அமர் பிரசாத் ரெட்டி கூறினார்.

RELATED ARTICLES

Recent News