Connect with us

Raj News Tamil

ப்ரைடு ரைஸ் செய்து அசத்தும் சிறுவர்கள் ! வைரலாகும் காணொளி !

உலகம்

ப்ரைடு ரைஸ் செய்து அசத்தும் சிறுவர்கள் ! வைரலாகும் காணொளி !

சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது.இதில் குழந்தைகள் சாா்ந்த வீடியோக்கள் பகிரப்பட்டு பலரின் கவனங்களை ஈா்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் 3 வயது கொண்ட சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல் திறன் பயனர்களை வியக்க வைத்துள்ளது.

நெய்ஜியாங் பகுதியை சேர்ந்த அந்த சிறுவர்கள் சமையல் பாத்திரத்தை பெரியவர்களை போன்று கையாள்கின்றனர். அவர்கள் ப்ரைடு ரைஸ் செய்வது, அதனுடன் முட்டைகளை சேர்த்து கிளறுவது என சமையலில் அசத்தும் காட்சிகளை பார்த்த பயனர்கள் அவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top